சித்தம் கலங்குது சாமி...பொன்பரப்பியில் ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி...கமல், இளையராஜா எழுதிய பாடல்...

Published : Apr 20, 2019, 12:55 PM IST
சித்தம் கலங்குது சாமி...பொன்பரப்பியில் ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி...கமல், இளையராஜா எழுதிய பாடல்...

சுருக்கம்

பொன்பரப்பி வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ‘மருதநாயகம்’ படப்பாடல் வரிகளை வேதனையுடன் மேற்கோள் காட்டியுள்ளார்.

பொன்பரப்பி வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ‘மருதநாயகம்’ படப்பாடல் வரிகளை வேதனையுடன் மேற்கோள் காட்டியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர்  தொல்.திருமா வளவன்  பானை சின்னத்தில் போட்டி இட்ட அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில், நடு வீதியில் பானைகளை உடைத்து, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியினர்  வன்முறை நடத்தினர்.இதற்கு எதிர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் கொளுத்தினர்.

இந்த வன்முறைகளுக்கு பல அர்சியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மருதநாயகம்’ படத்தின் பாடலின் 4 வரிகளை வெளியிட்ட கமல் ...மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும்  அவமானம்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

கமலின் கனவுப்படமான  ‘மருதநாயகம்’ ‘97ல் பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்டு நிதிப் பற்றாக்குறையால் கிடப்பில் போடப்பட்டது. இப்படத்தை பிரிடிஷ் இளவரசி குயின் எலிஸபெத் துவக்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!