பௌர்ணமியை நோக்கி வளர்கிறார்… குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட வளர்மதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து !!!

Asianet News Tamil  
Published : Sep 06, 2017, 09:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
பௌர்ணமியை நோக்கி வளர்கிறார்… குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட வளர்மதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து !!!

சுருக்கம்

kamal tweet about valarmathi

பௌர்ணமியை நோக்கி வளர்கிறார்… குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட வளர்மதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து !!!

குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலை ஆக உள்ள  மாணவி வளர்மதிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள நடிகர் கமலஹாசன், நீதிபதிகளுக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில்  வணக்கம்  தெரிவித்துள்ளார். 

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரத்தை விநியோகித்து, மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி  வளர்மதியை கடந்த ஜூலை 12-ம் தேதி, போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அவரை குண்டர்  சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு சிறையில் அடைக்க சேலம் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வளர்மதியின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்  உத்தரவிட்டனர். 

இது குறித்து நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டரில், வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம். என பதிவிட்டுள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? இறுதி தீர்ப்பு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Raashi Khanna : ஓவர் கவர்ச்சி..! புடவையில் செம்ம லுக் விட்டு ரசிகர்கள் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணா..!