
சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு யாருடனாவது பிரச்சனை வந்தால் அதிகப்படியாக வளர்ப்பு சரி இல்லை என கூறி வந்தது அனைவரும் அறிந்தது தான். இது குறிப்பிட்ட ஒரு நபரை மட்டும் குறிக்காமல் அவர்களுடைய பெற்றோரையும் இழுத்து பேசுவது போல் இருந்ததால், சம்யுக்தா பேசும் இந்த வார்த்தைக்கு கடும் கண்டனம் எழுந்தது.
அதே போல், ஆரி சம்யுக்தா பற்றி சாதாரணமாக ஒரு விஷயத்தை முன் வைத்து பேசினார். அந்த வார்த்தை தன்னுடைய தாய்மையை இழிவு படுத்தியதாக ஒரு பிரச்சனையையும் கூட்டினார் சம்யுக்தா. ஆனால் ஆரி பேசியது பார்வையாளர்களுக்கு அப்படி பட்ட பின்பத்தை உருவாக்கவில்லை.
ஆரி தன் தாய்மையை இழிவு படுத்தி பேசினார் என, ஓவர் சீன் போட்டு அலப்பறை செய்த சம்யுக்தாவிற்கு கமல் இன்றைய தினம் செம்ம சாட்டையடி கொடுத்துள்ளார். குறிப்பாக வளர்ப்பு சரி இல்லை என எத்தனை முறை கூறி இருக்கிறீர்கள் என கேட்கிறார். அதற்க்கு சம்யுக்தா பலமுறை கூறி இருக்கிறேன் என உண்மையை ஒப்புக்கொள்கிறார்.
இந்த வார்த்தையின் அர்த்தம் தெரிந்து தான் பேசுகிறீர்களா என கேட்டதற்க்கு, ஆரி பேசிய வார்த்தையை முன்வைக்கிறார். ஆரிக்கு ஆதரவாக குறும்படம் போட தயாராகும் கமல், இது குறும்படமும் இல்லை அர்ச்சனா சொன்னது போல் குருமா படமும் இல்லை... படம் என கூறி, சந்தடி சாக்கில் அர்ச்சனாவையும் வெளுத்து விடுகிறார். குறிப்பிட்ட அந்த காட்சி ஒளிபரப்பாகிறது.
இது குறித்த புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.