ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் 5 இடங்களிலும் விஸ்வரூபம் எடுத்த கமல் 65’...பரமக்குடி படங்கள்...

Published : Nov 07, 2019, 11:31 AM IST
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் 5 இடங்களிலும் விஸ்வரூபம் எடுத்த கமல் 65’...பரமக்குடி படங்கள்...

சுருக்கம்

நேற்று மாலை முதலே முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் இந்தியா முழுவதுமிலிருந்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்கள் ஃப்ரொபைல் படங்களை கமலுடன் இருக்கும் படங்களை வைத்து மாற்றிவருகின்றனர். மிக ஆச்சர்யாமாக இம்முறை ரஜினி ரசிகர்கள் கமலை, அவரது சாதனைகளை வியந்து வாழ்த்துவதால் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் ஐந்து இடங்களிலும் கமல் பிறந்தநாள் வாழ்த்துகளே முன்னிலையில் உள்ளன. 

கமலின் மூன்று நாள் பிறந்தநாள் நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுக்க களைகட்டத் துவங்கியுள்ள நிலையில் இன்று காலை தனது அண்ணன் சாருஹாசன், மகள்கள் ஸ்ருதி, அக்‌ஷரா,நடிகை சுஹாசினி மற்றும் குடும்பத்தினருடன் தனது தந்தையின் உருவச் சிலையை பரமக்குடியில் திறந்து வைத்தார். அவருக்கு நடிகர் பிரபு உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

நேற்று மாலை முதலே முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் இந்தியா முழுவதுமிலிருந்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்கள் ஃப்ரொபைல் படங்களை கமலுடன் இருக்கும் படங்களை வைத்து மாற்றிவருகின்றனர். மிக ஆச்சர்யாமாக இம்முறை ரஜினி ரசிகர்கள் கமலை, அவரது சாதனைகளை வியந்து வாழ்த்துவதால் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் ஐந்து இடங்களிலும் கமல் பிறந்தநாள் வாழ்த்துகளே முன்னிலையில் உள்ளன. அதே போல் அஜீத், விஜய் ரசிகர்களும் கமலை மனப்பூர்வமாக வாழ்த்தி வருகின்றனர்.

கமலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சில தினங்கள் முன்பே தனது இல்லத்துக்கு வரவழைத்து தடபுடல் விருந்து வைத்துக்கொண்டாடிய பிரபு இன்று காலை பரமக்குடிக்கு நேரில் சென்று கமலுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தது பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘என் தந்தை சிவாஜியின் கலையுலக வாரிசு என்றால் அது கமல் ஒருவர்தான். அவர் எப்போதுமே எங்கள் குடும்ப உறுப்பினர்களுல் ஒருவர்’என்று எப்போதுமே பிரபு கமல் பற்றி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!