
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு, வெளியேறுவார் என குழப்பமான சூழல் உள்ளது. மேலும் இந்த வாரம் புதிதாக ஒரு பிரபலம் வீட்டிற்குள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதுநாள் வரை சண்டை போடுவதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வரும் பிக்பாஸ் சீசன் 2 பிரபலங்கள் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தி விளையாட வில்லை என்பது தான் பொதுவாக அனைவருடைய கருத்தாகவும் உள்ளது.
வெளியில் இருந்து பார்ப்பவர்கள் கருத்து இப்படி இருந்தாலும். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் போட்டியாளர்கள், ஜனனி, சென்ராயன், டேனி உள்ளிட்ட பிரபலங்கள் மிகவும் தெளிவாக விளையாடி வருவதாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் இன்று, வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் வில்லன் நடிகர் நம்பியார் பாணியில் "விலகியது திரை! வெளிரியது வேசம்! வெளி வந்தது சுயரூபம்! ஒருவரை ஒருவர் விஞ்சத் துடிக்கும் வஞ்ச விளையாட்டு! இனிதான் ஆரம்பமோ! என கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு என்ன காரணம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.