
விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் இரண்டு சீசன்களைவிட மூன்றாவது சீசன் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 மொத்தம் 16 போட்டியாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்டு தற்போது 8 பேருடன் 70 நாட்களை நெருங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த பிக் பாஸ் சீசனில் இருந்து கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் அடுத்த சீசனை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கமல் தொகுத்து வழங்கும் அளவுக்கு சிம்புக்கு பக்குவம் இருக்காது என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறிவருகின்றனர்.
கடந்த இரண்டு சீசனை போல் இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் வருவாரா அல்லது அரசியலில் கவனம் செலுத்துவரா என்று கேள்வி எழுந்தது. அதோடு நிகழ்ச்சியை நடிகர் சூர்யா அல்லது மாதவன் தொகுத்து வழங்குவர் என்று பரவியது.
ஆனால் அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் கமலே மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்குவது அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பலமாக சொல்லப்பட்டது.
அதோடு நிறைய ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அடுத்த சீசன் ஆரம்பிக்கும் போது சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் நடிகர் கமல் தொகுத்து வழங்குவது கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறிவருகின்றனர்.
அதனால் அடுத்த பிக் பாஸ் சீசனில் நடிகர் சிம்புவை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. பிக் பாஸ் மூன்றாவது சீசனே முடியாத நிலையில் அடுத்த சீசனில் சிம்பு தான் தொகுத்து வழங்குவார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்தி பரவி விடுவதாக கூறுகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.