
உலக நாயகன் கமல் ஹாசன், தற்போது காலில் அடிபட்டு தன் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அதே சமயம், சபாஷ் நாயுடு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடித்துள்ளதால், அதன் போஸ்ட் ப்ரோடைஷன் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது , கௌதமி கமலுடன் உள்ள உறவை பிரிய போவதாக அறிவித்துள்ளார், இதன் மூலம் தனது முன்றாவது காதலையும் இழந்துள்ளார் கமல்.
இவர் ஏற்கனவே வணிகணபதியை காதலித்து 1978ஆம் திருமணம் செய்தார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக 1988 ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன் பிறகு விவாகரத்து பெற்ற அதே ஆண்டு சரிகாவை திருமணம் செய்தார். 16 வருடம் சந்தோஷமாக சென்ற வாழ்க்கையில் திடீர் என்று சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது இரண்டாவது காதல் மனைவியையும் பிரிந்தார்.
அடுத்ததாக நடிகை கௌதமியுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி திருமணம் செய்யாமலேயே, வாழ்ந்துவந்தனர். 13 வருடம் ஒன்றாக இருந்த இவர்களது காதலும் தற்போது பிரிவில் முடித்துள்ளது.
பல படங்களில் காதல் நாயகனாக வளம் வந்த கமலின் வாழ்க்கையில் ஒரு காதல் கூட கடைசி வரை நிலைக்க வில்லை என்பது வேதனை.
இதனால் கால்லில் பட்ட வலி மறைவதற்குள், மனதில் காயம் பட்டுள்ளது இந்த மூன்றாவது காதலையும் இழந்து.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.