
பிரபல நடிகைகள் கூட எனக்கு முன்னால் உடை மாற்றுவார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்கள் கேமராக்களுக்கு முன்பு உடை மாற்றுவது சிரமமாக இருப்பதாக கூறியிருந்தனர். மேலும் குளியல் அறையில் கூட கேமரா இருந்தால் என்ன செய்வது என்று சந்தேகம் தெரிவித்து இருந்தனர்.
இது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் விளக்கம் அளித்துள்ளார். அதாவது பிக்பாஸ் வீட்டின் குளியல் அறையில் கேமராக்கள் இல்லை என்று கமல் கூறியுள்ளார். குளியல் அறையில் கேமரா வைத்து அதனை ஒளிபரப்பிதான் விஜய் டிவி டி.ஆர்.பியை உயர்த்த வேண்டிய நிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் டி.ஆர்.பிக்காக விஜய் டிவி அப்படி செய்யும் என்றால் தான் அவர்களுடன் இருக்கப்போவதில்லை என்று கமல் கூறியுள்ளார்.
திரைப்படங்களில் தான் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவுட்டோர் சூட்டிங்கின் போது திறந்த வெளியில் உடை மாற்றுவோம் என்று கமல் தெரிவித்து இருக்கிறார். அப்போது முன்னணி நடிகையாக இருந்த பலரும் தனக்கு முன்னால் உடை மாற்றுவார்கள் என்றும் அதற்கு காரணம் நான் அவர்களை பார்க்கமாட்டேன் என்கிற நம்பிக்கை தான் என்றும் கமல் கூறியுள்ளார். 18 வயதிலேயே நடிகைகள் உடை மாற்றுவதை பார்க்காத நான் 63 வயதிலா பார்க்கப்போகிறேன் என்றும் கமல் கேள்வி எழுப்பினார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பயங்கர சிரிப்பலை எழுந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.