கமலுக்கு பதிலடி கொடுத்த முதல் மனைவி வாணி கணபதி......!!!

 
Published : Nov 04, 2016, 09:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
கமலுக்கு பதிலடி கொடுத்த முதல் மனைவி வாணி கணபதி......!!!

சுருக்கம்

நடிகர் கமல் ஹாசன் வாணி கணபதி என்பவரை 1978 திருமணம் செய்தார். பின் 1988 இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் இந்த விஷயதை அனைவரும் மறந்து விட்டனர்.

அனால் அப்போது கமல் சொன்ன வார்த்தைகள் தற்போது நினைவு கூற பட்டுள்ளது, அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஸ்ருதி ஹாஸன் பிறந்தபோது நான் எல்லா பணத்தையும் இழந்த நிலையில் இருந்தேன். ஏனெனில் வாணியை விவாகரத்து செய்ததால் ஜீவனாம்சம் தர வேண்டி இருந்தது. மீண்டும் வாழ்க்கை தான்  ஜீரோவிலிருந்து துவங்கியது.

அப்போது கூட வாடகை வீட்டில் தான் இருந்தேன் என்றார் கமல்.

அதற்கு பதிலடி கொடுத்த வாணி கணபதி கூறியது...

இந்திய நாட்டில் விவாகரத்து செய்ததற்காக தரப்படும் ஜீவனாம்சம் ஒருவரை திவாலாக்கிவிடுமா என்றும் ?

ஒரு பெண்ணின் வாழ்நாளுக்கு தேவையான முழு தொகையையும் தரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறதா என்ன? போதிய அளவு பணம் தான் கிடைக்கிறதா என்றும்?

அவர் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா என அவரது ரசிகர்களையும் பொது மகளிடமும் கேட்டார்?

மேலும் அவர் பேசுகையில்  கமல் எப்போது சொந்த வீட்டில் இருந்தார்? திருமணத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் வாடகை வீட்டில் தான் இருந்தோம். ஆனால் கொஞ்ச நாட்கள் என் வீட்டாரின் சொந்த வீட்டில் இருந்தோம்.

அவரிடம் தேவையான பணம் இருக்கிறது. அதனால் அவருக்கு திவாலாகிவிடும் சூழ்நிலை ஏதும் கிடையாது. தனக்கு திறமை இருக்கிறது என்பதற்காக யார் மேலாவது பழி போட்டுவிடுவார்.

அவருக்கு வேறு ஏதாவது வழிகளில் பணம் போயிருக்கலாம். அதையெல்லாம் நான் சொல்லமாட்டேன்.

கமலிடம் நான் பேசுவது கிடையாது. பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. அவருக்கு அனுதாபம் வேண்டும் என்றால் யார் பெயரையும் பயன்படுத்தி வாங்க கூடாது என்றும் , அவருடைய வீழ்ச்சிக்கு நான் காரணமே கிடையாது என அதிரடியாக கூறிவிட்டார்.

ஏற்கனவே கௌதமி கமல் விஷயம், பற்றி எரியும் இந்த நேரத்தில் இதுபோன்ற பல தகவல்கல் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாய் சம்பாதித்தாலும் தங்கச்சி விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த தடாலடி முடிவு
மிகவும் வலி நிறைந்த நாட்கள்... இந்தியன் 3 ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த காஜல் அகர்வால்