உலக நாயகனுக்காக ஒரே இடத்தில் இணையும் ரஜினி - அஜித் - விஜய்! - வைரலாகும் 'கமல்-60' அழைப்பிதழ்... ரசிகர்கள் உற்சாகம்...

Published : Nov 06, 2019, 07:18 PM IST
உலக நாயகனுக்காக ஒரே இடத்தில் இணையும் ரஜினி - அஜித் - விஜய்! - வைரலாகும் 'கமல்-60' அழைப்பிதழ்... ரசிகர்கள் உற்சாகம்...

சுருக்கம்

தமிழ் திரையுலகைச் சேர்ந்த உச்ச நட்சத்திரங்களான ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பது அபூர்வம். அதுவும், தல அஜித் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அரிதிலும் அரிது.   

இதனால், ரஜினி - அஜித் - விஜய் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் பார்க்க மாட்டோமா?... அந்த அபூர்வம் நிகழாதா?.. என்ற எதிர்பாரப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.  அவர்களின் ஆவலையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில், ஒரு அபூர்வமான நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இதனை சாத்தியப்படுத்தியிருப்பது உலகநாயகன் கமல்ஹாசன்தான். அவரது 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் நிகழ்வில்தான் இம்மூவரும் பங்கேற்கின்றனர். 

சென்னையில் வரும் நவம்பர் 17ம் தேதி, கமல்ஹாசனின் 60 ஆண்டு கலைப்பயணத்தினை கொண்டாடும் வகையில், இசைஞானி இளையராஜாவின் மிகபிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழச்சியில், 44 ஆண்டுகாலம் கமல்ஹாசனுடன் இணைந்து பயணித்த அவரது நெருங்கிய நண்பரான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது, 'தல' அஜித், 'தளபதி' விஜய் ஆகியோரும் 'கமல்-60' நிகழ்ச்சியில் பங்கேற்பது தெரியவந்துள்ளது. ஆம், 'கமல்-60' நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. 

அதில், கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தில் அவரது சிறந்த கதாபாத்திரங்களுடன், இளையராஜா, ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் தனித்தனியே இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. காண்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் இருக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்தான் தற்போது, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்ந்த கமல்ஹாசனை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் தரப்பு அழைப்பு விடுத்ததாகவும், அதனை ஏற்று, ரஜினி, அஜித், விஜய் ஆகியோர்  சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 கமல் என்ற மாபெரும் கலைஞனை கவுரவிப்பதற்காக இந்திய திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றும் 'கமல்-60' நிகழ்ச்சியில், ரஜினி, அஜித், விஜய்யும் ஒன்றாக பங்கேற்பது  ரசிகர்களுக்கான கொண்டாட்டமாகவும் அமையும் என எதிர்பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?