
2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது, தமிழக அரசு சார்பாக வழங்கப்பட உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது 2011 - 2018 ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்டு விருது பெறுவோர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 20 திற்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் பெயர் இடம்பெற்றுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. மேலும் நடிகர்கள் கார்த்தி, பிரசன்னா, பொன்வண்ணன், பிரபு தேவா, சரவணன், ராஜசேகர்,ஆர்.ராஜிவ், பாண்டு,ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், சித்ராலட்சுமண, ஸ்ரீகாந்த் நகைச்சுவை நடிகர்கள் சந்தானம் , சூரி , எம்.எஸ் பாஸ்கர், தம்பிராமயைா, சிங்கமுத்து, ஆகிய நடிகர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகைகளில்... பிரியாமணி, குட்டிபத்மினி, நளினி, குமாரி காஞ்சனா தேவி, பழம் பெரும் நடிகை பி.ஆர். வரலட்சுமி, சாரதா, ராஜஸ்ரீ, புலியூர் சரோஜா, நிர்மலா பெரியசாமி, பரதநாட்டிய கலைலுர் பிரியா முரளி, உட்பட 201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. விருதுகளுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலையுடன் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விழாவில்முதல்வர் பழனிசாமி இதனை வழங்க உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.