ரஜினிகாந்த் இப்படிச் சொன்னாருன்னா காலா ரீலீஸ்… கர்நாடகா நிபந்தனை…..

First Published Jun 6, 2018, 8:26 AM IST
Highlights
Kala will be relaese in karnataka


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என  நடிகர் ரஜினிகாந்த்  கூறியதை திரும்பப் பெற்றால் காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று  கர்நாடக திரைப்பட வர்த்தகர் சங்கம் நிபந்தனை விதித்துள்ளது.

ரஜினி நடித்துள்ள 'காலா' திரைப்படம் நாளை  உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. ஆனால் இந்த படத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினி சொன்ன கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தடை போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக கொண்டு சென்றுள்ளார் நடிகரும் 'காலா' படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ்.

கர்நாடகாவில் 'காலா' படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர்  சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் 'காலா' படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், பெங்களூர் காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனுஷ் கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'காலா' படம் வெளியாகும் போது, எந்த அசம்பாவிதம் ஏற்படாதவாறு  தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் படம் வெளியாகும் தியேட்டர் விபரங்களை தயாரிப்பாளர் முன்கூட்டியே அரசுக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கர்நாடகா திரைப்பட வர்த்தக சங்க தலைவர் சாரா கோவிந்த், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினி கூறியதை திரும்பப்பெற வேண்டும். இருமாநில அரசும் பேசி தீர்வு காண வேண்டும் என ரஜினி கூறவேண்டும்.” என்ற நிபந்தனையை விதித்துள்ளார். இந்த நிபந்தனையை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டால் காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

பாகுபலி 2 ரிலீஸின் போது சத்தியராஜுக்கு எதிராக நிபந்தனை விதிக்கப்பட்டதைப் போல தற்போது, காலா ரிலீஸுக்கு ரஜினிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

click me!