ராகவா லாரன்ஸிடம் குழந்தை கேட்டு காஜல் அதிரடி...! ஏன் இப்படி ஒரு முடிவு..?

Published : Nov 05, 2019, 03:06 PM ISTUpdated : Nov 05, 2019, 03:08 PM IST
ராகவா லாரன்ஸிடம் குழந்தை கேட்டு காஜல் அதிரடி...! ஏன் இப்படி ஒரு முடிவு..?

சுருக்கம்

மௌனகுரு, கோ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென இடம் பிடித்தவர் காஜல் பசுபதி. இவர் சென்ற ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் இரண்டிலும் பங்கு பெற்றார். சாண்டி மாஸ்டருக்கும்   காஜல் பசுபதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். 

ராகவா லாரஸிசிடம் குழந்தை கேட்டு காஜல் அதிரடி...! ஏன் இப்படி ஒரு முடிவு..? 

பிக் பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்ற சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி தனக்கு தத்தெடுத்து வளர்க்க ஒரு குழந்தை வேண்டும் என இயக்குனர் ராகவா லாரன்ஸிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மௌனகுரு, கோ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென இடம் பிடித்தவர் காஜல் பசுபதி. இவர் சென்ற ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் இரண்டிலும் பங்கு பெற்றார். சாண்டி மாஸ்டருக்கும்   காஜல் பசுபதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் தனியாக தன் தாயாருடன் வசித்து வரும் காஜல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் 

இந்த நிலையில் சமீபத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சுர்ஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக நீங்கள் ஓர் குழந்தையை எடுத்து வளருங்கள். அக்குழந்தைக்கு சுர்ஜித் என பெயரிடுங்கள். குழந்தை படிப்புக்கு தேவையான அனைத்து செலவுகளையும் நானே எடுத்துக் கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார் லாரன்ஸ்.

இவருக்கு பதிலளிக்கும் விதமாக, காஜல் தன் மனதில் தோன்றிய ஒரு விஷயத்தை பதிவு செய்துள்ளார்.  அதாவது "குழந்தை இல்லாமல் வாழ்க்கை முழுமை பெறுவதில்லை; குழந்தை இல்லாமல் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறேன் என்பது எனக்கு தெரியும்; குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல; எனவேதான் உங்களுடைய உதவியை நாடுகிறேன்; குழந்தையை தத்தெடுக்க எனக்கு உதவி செய்ய வேண்டும்; அக்குழந்தையை சிறப்பாக வளர்ப்பதற்கு தேவையான அனைத்தும் என்னிடம் இருக்கிறது என நான் நம்புகிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முன்னதாக இதுகுறித்து ராகவா லாரன்ஸுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்று உள்ளார் காஜல். ஆனால் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாத காரணத்தினால் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!
மதுரையில் இருந்து சிம்புவின் அரசன் மாநாட்டை தொடங்கும் வெற்றிமாறன்: எப்போது ஸ்டார்ட் தெரியுமா?