Sep 19, 2017, 11:46 AM IST
நடிகை காஜல் தமிழில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் அறிமுகம் கொடுத்தவர். தற்போது வரை தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
இவர் தமிழ்த் திரையுலகில் ஆரம்பத்தில் பல சரிவுகளைச் சந்தித்தாலும், ராஜமௌலி இயக்கிய 'மகதீரா' திரைப்படம் தெலுங்கிலும், டப்பிங் செய்யப்பட்டு தமிழிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்து வந்த காஜல் அகர்வால், இந்த வருடம் தமிழில் அஜித்துடன் விவேகம் மற்றும் விஜயுடன் மெர்சல் படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் இவர், இனி நயன்தாரா பாணியில் கதைக்கும் இவருடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும் என்கிற முடிவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மனதை மயக்கும் இவரின் புகைப்படங்கள் இதோ....