ரூ.2.5 கோடி இழப்பீடு கேட்ட நடிகை காஜல் அகர்வால்...! அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்...! 

 
Published : Jun 25, 2018, 10:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ரூ.2.5 கோடி இழப்பீடு கேட்ட நடிகை காஜல் அகர்வால்...! அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்...! 

சுருக்கம்

kajal agarwal court pettision denaide

தமிழ் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வாலை வைத்து பிரபல தனியார் எண்ணெய் நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு, விளம்பர படம் எடுத்து அதனை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வந்தது. 

மேலும் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப அந்த நிறுவனம் ஒரு ஆண்டுக்கு மட்டுமே காஜல் அகர்வாலிடம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால்  ஒப்பந்த காலம் முடிந்து  மூன்று வருடம் ஆகியும், தொடர்ந்து அந்த தனியார் எண்ணெய் நிறுவனம் தான் நடித்த விளம்பர படத்தை ஒளிபரப்பி வருவதாகவும் இதனால் தனக்கு 2 . 5 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை  அந்த நிறுவனம் வழங்க வேண்டும் என கோரி நடிகை காஜல் அகர்வால் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டி.ரவீந்திரன் காஜல் அகர்வால் வழக்கு தொடர்ந்த என்னை நிறுவனம் இந்த விளம்பரத்தின் மீது காப்புரிமை பெற்றுள்ளதால் 60 ஆண்டுகள் வரை ஒளிபரப்பும் உரிமை உள்ளது என கூறி, கடந்த ஜூலை மாதம் காஜல் அகர்வால் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு வழக்கின் செலவை காஜல் திருப்பிக்கொடுக்குமாறும் உத்தரவிட்டார்.

நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகை காஜல் அகர்வால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில் தனியார் எண்ணெய் நிறுவனம் தன்னுடன் ஏற்படுத்திய ஒப்பந்த்த்தை மீறி செயல்பட்டது.

மேலும் ஒரு ஆண்டிற்கு மட்டுமே விளம்பரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மீறியுள்ளது. இதனால் எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை தனி நீதிபதி முறையாக கருத்தில் கொள்ளவில்லை மேலும் தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு ஏற்பட்ட வழக்கு செலவு தொகையை அளிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், காப்புரிமை சட்டத்தின் படி மனுதார் உரிமை கோர முடியாது என எனவே தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட்ட தேவையில்லை என தெரிவித்து நடிகை காஜல் அகர்வால் மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்