’இந்தியன் 2’ விலிருந்து எஸ்கேப் ஆவது எப்படி?...கலக்கத்தில் காஜல் அகர்வால்...

Published : Feb 26, 2019, 09:50 AM ISTUpdated : Feb 26, 2019, 10:40 AM IST
’இந்தியன் 2’ விலிருந்து எஸ்கேப் ஆவது எப்படி?...கலக்கத்தில் காஜல் அகர்வால்...

சுருக்கம்

ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் தனது கால்ஷீட் வீணடிக்கப்படுவதால் அப்படத்திலிருந்து விலகிவிடலாமா என்று காஜல் அகர்வால் குழம்பிப்போயுள்ளதாகத் தெரிகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் தனது கால்ஷீட் வீணடிக்கப்படுவதால் அப்படத்திலிருந்து விலகிவிடலாமா என்று காஜல் அகர்வால் குழம்பிப்போயுள்ளதாகத் தெரிகிறது.கமலின் அரசியல் செயல்பாடுகள், ஷங்கருடன் தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடு ஆகியவற்றால் ஒரு சில நாட்களே நடந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இப்படத்தில் கமலுடன் கஜல் அகர்வால் ஓரிரு நாட்களே நடித்திருந்த நிலையில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பிலிருந்து ஒரு தகவலும் இல்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் காஜலால் அடுத்த படங்களுக்கு கால்ஷீட் தரமுடியவில்லை.

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் முதல் முறையாக இப்படி ஒரு தர்மசங்கடத்தில் சிக்கி இருப்பதால் அது குறித்து வெளியே சொல்ல முடியாமல் தவித்துவருகிறாராம் காஜல். இப்படத்தை விட்டு வெளியேறாவிட்டால் ஏற்கனவே கமிட் ஆகி நடித்து முடித்திருக்கும் படங்கள் தவிர்த்து 2009ல் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாக நிலை இருக்கிறதாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!