சினிமா  கேளிக்கை வரியை குறைக்க முடியாது !!   ஸ்ட்ரிக்டா  சொன்ன அமைச்சர் கடம்பூர் ராஜு !!! 

 
Published : Oct 09, 2017, 11:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
சினிமா  கேளிக்கை வரியை குறைக்க முடியாது !!   ஸ்ட்ரிக்டா  சொன்ன அமைச்சர் கடம்பூர் ராஜு !!! 

சுருக்கம்

kadambur raju press meet

தமிழகத்தில்   உள்ள திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள   10 சதவீத  கேளிக்கை வரியை குறைக்க முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டதை அடுத்து, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்திற்கான ஜி.எஸ்.டி வரி 18%-லிருந்து  28 %-மாக உயர்த்தப்பட்டது.

இந்தநிலையில், திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை கொண்டுவர வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தமிழக அரசு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்து அறிவிப்பு ஒன்றை கடந்த 7-ம் தேதி வெளியிட்டது.

அதன்படி, 160 ரூபாயுடன் ஜிஎஸ்டி சேர்த்து 192 ரூபாய் வரை தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை விகிதம் இன்று முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று பழைய கட்டணத்திலேயே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று திரையங்குகள் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்றும், சினிமா துறைக்கு  மணி மண்டபம் கட்டிவிடாதீர்கள் எனவும், நடிகர் சங்க செயலாளர் விஷால் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில்  கேளிக்கை வரியை குறைப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய, அவர் 10 சதவீத  கேளிக்கை வரி என்பது  சினிமா துறைக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை எனவும் அவர் தெரிவித்திருப்பது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!