
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', தளபதி விஜய் நடித்த 'பைரவா' படங்கள் உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர். கபாலியில் எனக்கு முதல் காட்சியே ரஜினி சார் முன்னால் நடிப்பதுதான். நான் நடித்து முடித்தவுடன் “என்ன கோபி இப்படி நடிக்கிறீங்க, கலக்கிட்டீங்க என்றார். ரஜினி சார் மாதிரி ஒரு மனிதரைப் பார்க்கவே முடியாது என்று சிலாகித்து சொல்கிறார். மைம்கோபி. மைம் கலை என்றால் என்ன, அதற்குள் எப்படி வந்தீர்கள்?
இவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் இவரிடம் கேட்கும் கேள்வி. ஏன் உங்களுக்கு மைம் கோபி என்று பெயர். மைம் என்பது உலக மொழி. உலகில் மனிதன் எப்போது பிறந்தானோ அப்போதே மைம் தொடங்கிவிட்டது. முதலில் எந்த விதப் பயிற்சியும் இல்லாமல் மைம் கலையை ரொம்ப மோசமாகப் பண்ணியது நாங்கள்தான். பிறகு கல்லூரியில் தொடர்ந்து பயிற்சி பண்ண ஆரம்பித்தோம். மைம் கலை என்பது மிகவும் மெதுவானது. அதை ஏன் வேகமாக்கக் கூடாது என்று எங்கள் பாணியை மாற்றி அமைத்துக்கொண்டோம். 7 பேர் கொண்ட எங்கள் குழு இங்குள்ள போட்டிகளில் வென்று இந்திய அளவில் போட்டிகளில் கலந்துகொண்டது. 100 கோடி மக்கள் இருந்தாலும், அதில் நாம் தனியாகத் தெரிய வேண்டும் என்பதுதான் எங்கள் ஏழு பேருடைய ஆசையும். அதனாலேயே மைம் கலையில் தனித்து தெரிய வேண்டும் என்று நினைத்தேன் என்கிறார். இதனாலேயே எனக்கு மைம் கோபி என்று பெயர் வந்தது. என்ற அவர் பார்வையற்ற மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில்தான் அவர்களை விமானத்தில் பறக்க வைத்து அவர்களுடைய ஆசையை நிறைவேற்றுகிறேன் என்றார்.
ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். அந்த ஆசை பார்வையற்ற பலருக்கு வெறும் கனவாக இருந்து வரும் நிலையில் நடிகர் மைம்கோபி பார்வையற்ற மாணவர்கள் 19 பேர்களை சென்னையில் இருந்து மதுரைக்கு விமான பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். மதுரையில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்படும் அவர்கள் மீண்டும் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் மைம்கோபி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மைம்கோபி, 'ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற அந்த மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்ததாக கூறினார். மைம்கோபியின் இந்த மனிதாபிமான ஏற்பாடு திரையுலகினர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறும் போது பார்வையற்றவர்களால் வெளி உலகத்தை பார்க்கத்தான் முடியாதே தவிர சூழ்நிலைகளை உணர முடியும். எனவே தான் அவர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை தர எண்ணி இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்தேன் என்கிறார் மைம் கோபி. இப்பயணத்தால் சந்தோசமடைந்த அம்மாணவர்கள் மைம் கோபிக்கு நன்றி கூறினார்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.