KaathuVaakula Rendu Kaadhal: ஜிமிக்கி கம்மலோடு கண்மணியாக கலக்கும் நயன்தாரா..! சற்று முன் வெளியான கியூட் லுக்!

By manimegalai aFirst Published Nov 15, 2021, 6:34 PM IST
Highlights

நடிகர் விஜய் சேதுபதியுடன் (vijay Sethupathy)  நயன்தாரா (Nayanthara) - சமந்தா (Samantha) முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தின் நடிகர்களான, விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவின் லுக் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது நயன்தாராவின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியுடன் (vijay Sethupathy)  நயன்தாரா (Nayanthara) - சமந்தா (Samantha) முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தின் நடிகர்களான, விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவின் லுக் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது நயன்தாராவின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவும், சமந்தாவும், விஜய் சேதுபதியுடன் தனித்தனியாக திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இதுவரை ஒன்றாக இணைந்து நடித்ததில்லை. இந்நிலையில் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் நயன்தாரா - சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ளார்.

குறிப்பாக நயன்தாராவின் காதலராக விக்னேஷ் சிவன், 'நானும் ரவுடிதான்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி - நயன்தாராவை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் அப்டேட் பல நாட்களுக்கு பின் நேற்றைய தினம் வெளியானது. அதில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார் விக்னேஷ் சிவன்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம், வெளியிட்ட நிலையில், பின்னர் சமந்தாவின் கதாபாத்திரத்தின் ரகசியத்தை வெளியிடும் விதமாக, அவர் மாடர்ன் உடையில் மிகவும் ஸ்டைலிஷாக நகம் கடித்து கொண்டு இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டு, சமந்தாவின் பெயர் கதீஜா என்றும் தெரிவித்திருந்தது படக்குழு.

இரண்டு நடிகர்களின் லுக் வெளியிட்ட நிலையில், நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த ரகசியமும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று முன்னர் நயன்தாராவின் பெயர் கண்மணி என்பதை படக்குழு தெரிவித்துள்ளது. இதில், ஜிமிக்கி கம்மலுடன் ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட் மற்றும் சிவப்பு நிற புடவையில்... பெயருக்கு ஏற்ற போல் அழகு தேவதையாக மிளிர்கிறார் நயன்தாரா. ஒரே நாளில் விஜய் சேதுபதி, சமந்தா, மற்றும் நயன்தாரா கதாபாத்திரத்தின் ரகசியத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படக்குழு.

 

Presenting 🤩 from ❤️❤️ pic.twitter.com/bdxn85piNi

— Seven Screen Studio (@7screenstudio)

click me!