ரஜினி போட்ட உத்தரவு... மௌன அஞ்சலிக்குப்பின் ஷோ ஆரம்பம்...

 
Published : Jun 07, 2018, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
ரஜினி போட்ட உத்தரவு... மௌன அஞ்சலிக்குப்பின் ஷோ ஆரம்பம்...

சுருக்கம்

kaala screening after Silent tribute Tuticorin

தூத்துக்குடியில் காலா திரைப்படம் வெளியான திரையரங்குகளில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின் படம் திரையிடப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிலும், தடியடியாலும் படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி நேரில் சென்று நலம் விசாரித்து, நிதயுதவியும் வழங்கினார்.



இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் “காலா” இன்று உலகம் முழுவதும் வெளியானது. அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள “பாலகிருஷ்ணா” திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. இதையொட்டி ரஜினிகாந்தின் வேண்டுகோளுக்கு இணங்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏற்படாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு திரைப்படம் திரையிடுவதற்கு முன்பாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வழக்கமாக ரஜினிகாந்தின் திரைப்படம் என்றால் தூத்துக்குடியில் ஆரவாரமாக திருவிழா போல் கொண்டாடுவோம். ஆனால் இந்தமுறை ரஜினிகாந்தின் வேண்டுகோளுக்கு இணங்க அமைதியாக மவுன அஞ்சலி செலுத்தி படத்தை ஆரம்பித்துள்ளோம் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?