
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம், கடந்த மாதம் ரிலீசாகி, ரசிகர்களின் பேராதரவுடன் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது.
இதுதவிர அயலான், டான் போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவற்றுள் டான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
டான் படத்தை கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாவதால், டான் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளனர். அதன்படி இப்படத்தை இந்தாண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை ஒட்டி வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் sk 20 படம் குறித்த தகவலை சிவர்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அணுதீப் இயக்கத்தில் உருவாக்கவுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாகவும் சுரேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.