விஷ்ணு விஷால் வீட்டுக்குக் குடியேறிய ஜுவாலா கட்டா...கல்யாணச் சாப்பாடு உண்டா இல்லையா பாஸ்?...

Published : Jun 28, 2019, 05:35 PM ISTUpdated : Jun 28, 2019, 05:40 PM IST
விஷ்ணு விஷால் வீட்டுக்குக் குடியேறிய ஜுவாலா கட்டா...கல்யாணச் சாப்பாடு உண்டா இல்லையா பாஸ்?...

சுருக்கம்

’எனக்கு ஜூவாலா கட்டாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும். நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது’ என்று நடிக விஷ்ணு விஷால் கொஞ்சம் குழப்பிக்கொண்டிருந்த நிலையில், அப்படியெல்லாம் இல்ல பாஸ் நாங்க ஒண்ணாதான் இருக்கோம்’ என்பது போல் ஒரு ட்விட் வெளியிட்டிருக்கிறார் விளையாட்டு வீராங்கனை.  

’எனக்கு ஜூவாலா கட்டாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும். நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது’ என்று நடிக விஷ்ணு விஷால் கொஞ்சம் குழப்பிக்கொண்டிருந்த நிலையில், அப்படியெல்லாம் இல்ல பாஸ் நாங்க ஒண்ணாதான் இருக்கோம்’ என்பது போல் ஒரு ட்விட் வெளியிட்டிருக்கிறார் விளையாட்டு வீராங்கனை.

நடிகர் விஷ்ணு விஷால், தனது காதல் மனைவி ரஜினி நட்ராஜை கடந்த ஆண்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த விஷ்ணு விஷால், பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி புகைப்படங்களை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.இதையடுத்து விஷ்ணு, ஜூவாலாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இதற்காகத் தான் மனைவியை அவர் பிரிந்தார் என்றும் செய்திகள் பரவின. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில்,’எனக்கு ஜுவாலாவை பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். எனக்கு ஜுவாலாவை ஓராண்டு காலமாக தெரியும். இருவருக்கும் பொதுவான நண்பர் களுடன் சேர்ந்து நேரத்தைச் செலவிடுவோம். எங்கள் நட்பு அதை தாண்டி அடுத்தக் கட்டத்துக்கு திருமணத்தை நோக்கிச் செல்லுமா என்பதை இப்போது சொல்ல இயலாது. நாங்கள் அவரவர் வேலைகளில் பிசியாக இருக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அப்படிப்பட்ட குழப்பமெல்லாம் தேவையில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பது போல் ‘சில்லென்றிருக்கும் சென்னையில்’ என்ற பதிவோடு விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ஜுவாலா கட்டா. கல்யாணச் சாப்பாடு போடுற மாதிரி ஐடியா இருக்கா இல்லைன்னா இப்பிடியே லிவிங் டுகெதர்னு செட்டில் ஆயிடுவீங்களா பாஸ்?

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!