
ஜல்லி கட்டு போராட்டத்தில், காது வலிக்கும் அளவிற்கு காட்டு கத்து கத்தி, பல ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவர் தான் ஜெயிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏனோ... கிடைத்தது ஏமாற்றமே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேமரா இருப்பதை மறந்து, சில விஷயங்களை செய்ததால் சர்ச்சையில் சிக்கினார்.
மக்களின் ஓட்டுகள் குறைவாக பெற்று, வெளியே வந்ததும் தொகுப்பாளினியாகவும், திரைப்படமே நடிக்க மாட்டேன் என கூறி விட்டு ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் தற்போது வரை அந்த படங்கள் இன்னும் வெளியாகாமல் தான் உள்ளது.
பின் அரசியலுக்கு வர போறேன் என வீடியோ, ஆண் நண்பருடன் அடிக்கடி புகைப்படம் போட்டு, நானும் இருக்கேன்... நானும் இருக்கேன் என கூறி வந்த இவர், இப்போது வீடியோ ஒன்றை பிரேமம் பட நாயகி ரேஞ்சுக்கு பீல் பண்ணி வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், இன்னும் ஒரு படம் கூட வெளியாக வில்லை இப்படி ஹீரோயின் ரேஞ்சுக்கு பீல் பண்ணி வீடியோவா... என வழக்கம் போல் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.