நடித்தே ஆகணும்! பெற்றோருடன் சண்டை போடும் ஜூலி..!

 
Published : Oct 09, 2017, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
நடித்தே ஆகணும்! பெற்றோருடன் சண்டை போடும் ஜூலி..!

சுருக்கம்

Julie fight her parents

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பீச்சில் கத்திக் கத்தியே பிரபலமானவர் ஜூலி. இவர் சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் இவருடைய உண்மையான குணம் வெளிவந்தது. இதை பார்த்து இவரை ஆதரித்த பலர் இவரை வெறுக்க தொடங்கிவிட்டனர்.

ஏற்கெனவே ஒரு சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள ஜூலிக்கு தற்போது சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

ஏற்கனவே ஜூலி செய்த வேலையால் அவருடைய பெற்றோர் வெளியே தலை காட்ட முடியாமல் உள்ளனர். இவருடைய சொந்த பந்தங்களும் ஜூலியை அசிங்கப்படுத்தி வருகின்றனராம்.

ஏற்கனவே ஜூலியின் தம்பி, தன்னுடைய அக்கா கண்டிப்பாக படங்களில் நடிக்க மாட்டார் என கூறி இருக்கும் நிலையில், ஜூலிக்கு திடீர் என நடிக்கும் ஆசை வந்துவிட, இவரை படங்களில் நடிக்க வைக்க அணுகும் ஒரு சில தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும்  நடிக்க சரி என்று கூறுவதுபோல் பேசியுள்ளாராம்.

இதனை அறிந்த அவருடைய பெற்றோர் மற்றும் தம்பி கண்டிப்பாக நடிக்கக் கூடாது என கூற, தனக்கு நடிக்க வாய்ப்பு வருகிறது இதை நான் இப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பெற்றோருடன் சண்டை போட்டு வருகிறாராம் ஜூலி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பார்வதிக்கு விஜயா செய்த துரோகம்... முத்துவின் செயலால் முறிந்த நட்பு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!