
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் செவிலியர் ஜூலி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது செவிலியர் வேலையை தூக்கி எரிந்து விட்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'ஓடி விளையாடு பாப்பா' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் ஏற்கனவே பல இடங்களில் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், எதையாவது ஒன்றை பேசி நல்லா வாங்கி கட்டிக்கொள்வார்.
இதற்காக இவருக்கு பலர் அறிவுரை கூறியும் இவர் யாருடைய பேச்சையும் மதிக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஜூலி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியின் நிறைவில் கலா மாஸ்டர் "ராதை மனதில்..." என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த நடனம் இவர் ஆடி கொண்டிருக்கும் போதே ஜூலியும் நடுவில் நடனமாடியுள்ளார்.
இதை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள், ஜூலி எட்ட போ... உன் டான்ஸ் கேவலமா இருக்கு என்று கத்தியுள்ளனர். இதில் அவமானப்பட்ட ஜூலி பின் நடனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் ஓரமாக நின்று விட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.