' பப்ளிக் ஸ்டார்' நடிக்கும் படத்தின் கதாநாயகியாக மாறினார் 'பிக் பாஸ்' ஜூலி..! 

 
Published : Jan 01, 2018, 07:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
' பப்ளிக் ஸ்டார்' நடிக்கும் படத்தின் கதாநாயகியாக மாறினார் 'பிக் பாஸ்' ஜூலி..! 

சுருக்கம்

julie acting in heroine character

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையே  திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் இளைஞர்களின் போராட்டம்... கடந்த ஆண்டு நம்  பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்தியே ஆக வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம். இந்தப் போராட்டத்தில், அரசியல் தலைவர்கள் குறித்து ஊடகங்களின் வெளிச்சத்தில் அவதூறாகக் கத்தியே பிரபலமானவர்தான் ஜூலி.

இந்த ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டு... பிரபலங்கள் விளையாடிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் 'வீர தமிழச்சி என்கிற அடையாளத்துடன் கலந்துகொண்டார்.  ஆரம்பத்தில் இவரை பலர் ஆதரித்தாலும் இவர் நடந்துகொண்ட விதம் பலரிடமும் வெறுப்பை சம்பாதிக்க வைத்தது.

இதைத் தொடர்ந்து தற்போது பிரபல தனியார் தொலைக் காட்சியில், தொகுப்பாளினியாக உள்ளார் ஜூலி.  இந்நிலையில் தற்போது ஜூலி 'K7 புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, "இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்குப்பிடித்து விட்டது. மேலும் இந்தப் படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்" என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்