
ஜோதிகா - விதார்த் நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது,.
ஃபீல் குட் வகைப் படங்களைக் கொடுப்பதில் கை தேர்ந்தவர் ராதாமோகன். அபியும் நானும், பயணம், மொழி, அழகிய தீயே, சமீபத்தில் வெளியான 60 வயது மாநிறம் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். இவருடன் நடிகை ஜோதிகா மீண்டும் இணைந்துள்ள படம் தான் காற்றின் மொழி. 2007ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த மொழி படத்துக்குப் பின்னர் மீண்டும் இப்படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். மொழி படத்தில் வரும் காற்றின் மொழி ஒலியா,. இசையா என்ற மெலோடி பாடலில் இருந்து இப்படத்திற்கு தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியில் நடிகை வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தும்ஹரி சுலு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். வித்யாபாலன் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். ஜோதிகாவின் கணவராக விதார்த் நடிக்கிறார். நடிகர் சிம்பு இப்படத்தில் குணசித்ர வேடத்தில் தோன்றுகிறார். போஃப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் கோவிந்த் படத்தை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படத்தை அக்டோபர் 18ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது, தீபாவளிக்குப் பின்னரே படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அக்டோபர் 18ஆம் தேதியன்று, தனுஷின் வடசென்னை முதல் பாகம், விஷாலின் சண்டக்கோழி2, அண்டாவக் காணோம், திருப்பதிசாமி குடும்பம், எழுமின் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினம் படத்தை வெளியிட்டால் முறையான திரை அரங்குகள் மற்றும் காட்சிகளைப் பெற போராட வேண்டி இருக்கும் என்று பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே படம் தீபாவளிக்குப் பின்னர் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.