மலையாள இயக்குனர்ஜீத்து ஜோசப்பின் அடுத்த படம்! கதாநாயகனாக கார்த்தி!

By manimegalai aFirst Published Oct 6, 2018, 7:53 PM IST
Highlights

தேவ் திரைப்படத்துக்குப் பின் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள திரைப்படத்தை, த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தேவ் திரைப்படத்துக்குப் பின் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள திரைப்படத்தை, த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படங்கள் ஹிட்டடித்தன. வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இருந்தது. இதை அடுத்து கார்த்தி, புதுமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார். முந்தைய இரு படங்களில் போலீஸ் அதிகாரி, விவசாயியாக நடித்த கார்த்தி, இந்தப் படத்தில் மீண்டும் சாக்லேட் பாயாக மாறுகிறார். முழுக்க முழுக்க ரொமாண்டிக் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட படமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு தேவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 50 கோடி ரூபாய் பொருட்செலவில் படத்தை தயாரிக்கிறது இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். மேலும் முன்னணி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், நவரச நாயகன் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முன்னணி இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். சென்னை, ஐதராபாத், இமயமலை, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. 

படத்தை கிறிஸ்துமசை குறிவைத்து டிசம்பர் 21ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. மலையாளத்தில் மோகன் லாலை வைத்து த்ரிஷ்யம் என்ற மெஹா ஹிட் திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்த கார்த்தியை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. த்ரிஷ்யத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசத்தையும் இவரே இயக்கி இருந்தார். இதில் உலக நாயகன் கமலஹாசன், கவுதமி ஆகியோர் நடித்திருந்தனர்.

 

இதே இயக்குனர் காத்தியை வைத்து படம் இயக்கவுள்ளார். இருக்கையின் நுனியில் அனைவரையும் அமர்ந்து பார்க்க வைக்கும் வகையிலான த்ரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை வியாகாம் 18 நிறுவனம் தயாரிக்கவுள்ளது, விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!