ஜோக்கர் நடிகை காயத்ரிக்கு டும் டும் டும்...!

 
Published : Apr 06, 2018, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
ஜோக்கர் நடிகை காயத்ரிக்கு டும் டும் டும்...!

சுருக்கம்

jocker movie heroine marriage

கடந்த 2016 ஆண்டு இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இன்றி சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. 

இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை 'காயத்ரி கிருஷ்ணன்'. இப்படத்தில் அரசுக்கு எதிராக போராடும் போராளி பெண்ணாக நடித்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றார். 

மேலும் இவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இவர் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காயத்ரி திருவனந்தபுரத்தை சேர்ந்த சினிமா ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆம் தேதி மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டு கடைசியிலே அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இது காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து தான் நடிக்க உள்ளதாகவும் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?