
கோடி கணக்கில் பணமோசடி செய்ததாக நடிகர் ஜே.கே ரித்தீஷ் மற்றும் அவரது மனைவிமீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன். இவர் இன்று காலை சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ், போலி ஆவணம் மூலம் ரூ.2.18 கோடி மோசடி செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
ஆதிநாராயணன் கொடுத்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஜே.கே.ரித்தீஷ் அவரது மனைவி ஜோதீஸ்வரி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் கருணாஸின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, %ஜே.கே.ரித்தீஷ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.