
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்றான 'எதிர்நீச்சல்' சீரியலில்... ஓவராக ஆட்டம் போட்டு வந்த குணசேகரனையே, அடக்கி வைக்கும் அளவுக்கு ஜீவானந்தம் தன்னுடைய சுய ரூபத்தை காட்டுவது தான், அடுத்தடுத்த எபிசோடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் இன்று குணசேகரனை குண்டுக்கட்டாக தூக்கி வெளியில் போடுவது செம்ம ஹை லைட்.
ஜீவானந்தம் என்பவர் பெயருக்கு, பட்டம்மாளின் 40% சொத்துக்களும் போய்விட்டது என்கிற அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டு வராத குணசேகருக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் ஜீவனந்தத்தின் மூலம் நடந்து வருகிறது. ஜனனி ஜீவனந்தத்துடன் சேர்ந்து கொண்டு.. தன்னை ஏமாற்ற இப்படி ஒரு நாடகத்தை போட்டு வருகிறார் என குணசேகரன் நினைத்து கொண்டிருக்கிறார். அதே போல் ஜனனியும், குணசேகரனின் ஆள் தான் ஜீவனந்தன், அதனால் தான் தந்திரமாக சொத்துக்களை கைப்பற்றியுள்ளார் என நினைக்கிறார்.
இளம் நடிகையுடன் காதலா..? பிக்பாஸ் ராம் ராமசாமி வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படம் வைரல்!
அனால் தற்போது ஜீவானந்தத்தை பார்த்து பேசுவதற்காக, அவர் அலுவலகத்திற்கு... இருவருமே வந்த போது தான் உண்மை என்ன என்பது புரிகிறது. அதே நேரம்.. ஜீவானந்தம் யார்? அவருக்கும் பட்டம்மாளுக்கும் என்ன சம்பந்தம்? இந்த சொத்துக்களை அவர் கைப்பற்ற என்ன காரணம்? என்கிற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதில் உள்ள நிலையில், விரைவில் இதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய எபிசோடில், குணசேகரன் முன்பு துப்பாக்கியை வைத்து மிரட்டி.. 10 நிமிடத்திற்குள் ஓடி விட வேண்டும் என டைம் கொடுத்த ஜீவானந்தத்தின் கோவத்தை மேலும் சீண்டி பார்க்கும் விதமாக, கத்தி ஆர்ப்பாட்டம் போடுகிறார் குணசேகரன் . இவரின் இரு தம்பிகளும் அடிக்க பாய்வதால், கதிர் மற்றும் ஞானத்திற்கு தர்மஅடி கிடைப்பதோடு, குணசேகரன் குண்டு கட்டாக தூக்கி வெளியே போடப்படுகிறார்.
மேலும் ஜனனி ஜீவானந்தத்திடம் பேசிக்கொண்டிருக்கும் போது... கோட் சூட்டில், என்ட்ரி கொடுக்கிறார் கெளதம். இதை பார்த்து, ஜீவானந்தம் ஆள் தான் கெளதம் என்பது, ஜனனிக்கு தெரியவர உச்சகட்ட அதிர்ச்சியில் உறைகிறார். எனவே இன்றைய நிகழ்ச்சி... பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.