ஜெயம் ரவி குட்டி கமல்ஹாசன்.....!!! பிரபுதேவா புகழாரம்....!!!

 
Published : Dec 04, 2016, 05:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
ஜெயம் ரவி குட்டி கமல்ஹாசன்.....!!! பிரபுதேவா புகழாரம்....!!!

சுருக்கம்

ஜெயம் ரவியை வைத்து, ரோமியோ ஜூலியட் என்கிற வெற்றி படத்தை கொடுத்த லட்சுமண் இப்போது மீண்டும்  ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்தசாமியை வைத்து இயக்கிவரும் படம் போகன்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 
இந்த விழாவில் தயாரிப்பாளர் பிரபுதேவா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே பிரபுதேவா 2011ஆம் ஆண்டு இதே ஜோடியை  வைத்து  'எங்கேயும் காதல்' என்ற படத்தை இயக்கியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த விழாவில் பேசிய பிரபுதேவா, 'ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளிவிட்டார். 

இந்த படத்தின் நாயகன் ஜெயம் ரவி பற்றி பேசிய அவர் 'சினிமாவில் பல நுணுக்கங்களை ஜெயம் ரவி அறிவார் என்றும் அவரை ஒரு குட்டி கமல்ஹாசன் என்று அழைக்கலாம் என்று  கூறினார். 

மேலும் 'எங்கேயும் காதல்' படத்தில் ஹன்சிகா நடித்ததற்கு 'போகன்' படத்தில் நடித்ததற்கு  நிறைய  வித்தியாசம் உள்ளது என்றும் நடிப்பில் ஹன்சிகா பெருமளவு மெருகேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ