
தமிழ் திரையுலகில் ஒரு சில நடிகர்களுக்கு மட்டும் நல்ல இயக்குநர்களுடன் இயல்பாகவே நட்பு ரீதியில் கூட்டணி அமைந்துவிடும். அதற்கு காரணம் இருவரின் எண்ணங்களும், மன ஓட்டங்களும் ஒரே மாதிரி அமைந்துவிடுவதுதான்.
இப்படி, தல அஜித்துக்கு சிவா, விஜய்க்கு அட்லி, தனுஷுக்கு வெற்றிமாறன் என நடிகர்கள் - இயக்குநர்களின் வெற்றிக்கூட்டணியை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்த வரிசையில், நடிகர் ஜெயம் ரவி - இயக்குநர் லெக்ஷ்மண் கூட்டணியும் ஒன்று எனலாம். 'ரோமியோ ஜுலியட்', 'போகன்' படங்களின் வெற்றியை தொடர்ந்து, 3-வது முறையாக இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
இது, அவர் நடிக்கும் 25-வது படம் என்பது ஹைலைட். இந்த படத்தில், ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, டட்லி ஒளிப்பதிவு செய்கிறார்.
விவசாயத்தை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்துக்கு 'பூமி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
விவசாயிகள் படைசூழ தலையில் முண்டாசுடன் ஆக்ரோஷமாக ஜெயம்ரவி பார்க்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக், சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. கோமாளி படத்தின் வெற்றிக்குப் பிறகு.ஜெயம் ரவி நடிக்கும் 'பூமி' படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.