
நடிகர் ஜெயம் ரவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
மலேசிய நட்சத்திர கலைவிழாவிற்கு தமிழகத்திலிருந்து சுமார் 350 கும் மேற்பட்ட நடிகர் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதில் நடிகர் கமல் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் கலந்துக்கொண்டதால் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் பல கலை நிகழ்சிகளும்,போட்டிகளும் நடத்தப்பட்டன.இந்நிலையில், உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் இருக்கும் போதே இந்த விழாவில் ஜெயம் ரவி கலந்துகொண்டுள்ளார்.மலேசியாவில் சென்ற வுடன் அதிக காய்ச்சல் இருந்ததால், அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்துக் கொண்ட ஆரிக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு காலில் கட்டு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.