
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி 'தடக்' என்கிற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியானார். இந்தப்படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் ஜான்வியின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.
அதன் பிறகு புதிய படங்களில் நடிக்க அவருக்கு வாய்புகள் வந்தன. தொடந்து ஜான்வி மற்றும் அவருடைய தந்தையை அணுகி, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கதை சொல்லி வருகின்றனர்.
தற்போது ஜான்வி பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் இயக்கம் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான இளம் நடிகர், விஜய் தேவரகொண்டா நடிக்கும் , தெலுங்கு பட மொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஜான்வியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
அதே போல் தமிழ்ப் படத்தில் நடிக்கவும் ஜான்விக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாம். இரண்டு பெரிய இயக்குனர்கள் அவரை அணுகி கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜான்வி தரப்பில் கூறும்போது 'தமிழ்', தெலுங்கு இயக்குனர்கள் ஜான்விக்கு கதை சொல்லி உள்ளனர் தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க ஜான்வியும் ஆர்வமாக உள்ளதால், விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரும் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.