
ஹாலிவுட் ரசிகர்களை கவர்ந்திழுத்த உலக புகழ் பெற்ற படங்களில் முக்கியமானது ஜேம்ஸ் பாண்ட் 007 படங்கள். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மாறினாலும் அவர்களுக்கான ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் சற்றும் குறைந்தது. கிடையாது. இந்நிலையில் முதன் முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷான் கானரி மரணமடைந்த செய்தி ஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் ஃபவுண்டன் பிரிட்ஜ் நகரில் பிரிந்த ஷான் கானரி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் நோ, நெவர் சே நெவர் அகைன், டைமண்ட்ஸ் ஆர் ஃபாரவெர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 1988 ‘தி அண்டச்சபிள்ஸ்’ என்ற படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர். அதுமட்டுமின்றி 2 பாஃப்தா விருதுகள், 3 கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்று ஹாலிவுட்டிற்கு பெருமை சேர்த்தவர். தற்போது 90 வயதாகும் ஷான் கானரி பகாமாஸில் தனது இறுதி காலத்தை கடந்தி வந்த நிலையில் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஷான் கானரிக்கு ஜேஸன் கானரி என்ற மகன் உள்ளார். அவரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.