
ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது தமிழர்களின் கலாச்சாரமாக பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.
ஆனால் கடந்த இரண்டு வருடமாக சுப்ரீம் கோர்ட் தடை காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள், சமூக அமைப்புகள் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டின் பெருமையை உணர்த்தும் வகையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்காமாராஜ் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார். 'கொம்பு வச்ச சிங்கமடா' என்ற இந்த பாடல் மிக விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் இந்த பாடலின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் தற்போது மழையின்மை காரணமாக வாடி கொண்டிருக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு தரப்படும் என்று ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.
இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்று வாடும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று நியூஸ் பாஸ்ட் சார்பாக வாழ்த்துகள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.