
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவின் அறிமுகம் கொடுத்து தற்போது 'மீசையை முறுக்கு' படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்திருப்பவர் ஹிப் ஹாப் ஆதி.
இவர் கோயமுத்தூர், மதுரை, சென்னையில் நடை பெற்ற, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முழு மூச்சுடன் பங்கு கொண்டு மாணவர்களுடன் இணைந்து போராடினார்.
மேலும் பாடல்கள் மூலமும், முதல் முதலில் தமிழர்களில் பாரம்பரியம் பற்றியும் ஜல்லிக்கட்டு பற்றியும் குரல் கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்களாக போராடிய ஆதி தற்போது ஏன் இந்த ஜல்லிக்கட்டு போராட்ட களத்தை விட்டு வெளியேறினார் என்பது பற்றி ஆதியே கூறியுள்ளார்.
போராட்டம் ஆரமித்தது முதல், மிக அமைதியான முறையில் அறப்போராட்டமாக சென்ற இந்த போராட்டம் தற்போது வேறுவிதமாக மாறி வருவதால் மிகவும் புண் பட்டதாக தெரிவித்தார்.
இந்த போராட்ட களத்தில் பலர், தேசிய கொடியை அவமான படுத்தியதாகவும், ஜாதி கலவரத்தை தூண்டியதாகவும், மிக கேவலமாக வார்த்தைகளால் பாரத பிரதமர் மோடி... முதலமைச்சர் என மிக இழிவாக பேசியது தங்களுடைய போராட்டத்தை இழிவு படுத்தியதால் இந்த போராட்டத்தை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.