வேஷ்டி சட்டை, கூலிங் கிளாசில்... நாக்கை கடித்து தோட்டாக்களை தெறிக்கவிடும் தனுஷ்! 'ஜகமே தந்திரம்' டீசர்!

By manimegalai aFirst Published Feb 19, 2020, 5:35 PM IST
Highlights

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கியதற்கு பின், அவருடைய மருமகன் தனுஷை வைத்து, D 40  படத்தை இயக்கி வந்தார்.
 

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கியதற்கு பின், அவருடைய மருமகன் தனுஷை வைத்து, D 40  படத்தை இயக்கி வந்தார்.

இந்த படத்தில் 'பேட்ட' ரஜினிகாந்த் எப்படி மீசை, ஹேர் ஸ்டைல் வைத்து நடித்தாரோ அதே கெட்டப்பில் தனுஷும் நடித்து வந்தார். எனவே 'பேட்ட' படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷை வைத்து கார்த்தி சுப்புராஜ் இயக்கி வருகிறாரா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

இந்த படம் பற்றி இது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் மற்றும் படத்தின் பெயர் 'ஜகமே தந்திரம்' என்பது வெளியிடப்பட்டுள்ளது.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டயன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு, சந்தோஷ் நாயராயணன் இசையமைத்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், தீபக் பரமேஷ், சின்னஜெய்த், வடிவுக்கரசி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள டீசரில்... தனுஷ் வேஷ்டி சட்டையில்... கருப்பு கலர் கூலிங் கிளாஸ் அனைத்து, இரண்டு கைகளுக்கும் இரு துப்பாக்கிகள் மற்றும் முதுகில் ஒரு துப்பாக்கி வைத்து கொண்டு, நாக்கை கடித்தபடி சுடும் காட்சிகள் உள்ளது.

'ஜகமே தந்திரம்' டீசர் இதோ... 

click me!