ஒரு நாள் லீவு போட்ட குத்தம்! மணிமேகலை வீட்டில் வெடிச்சிடுச்சு குக்கர்! வைரலாகும் வீடியோ...

Published : Feb 19, 2020, 04:02 PM ISTUpdated : Feb 19, 2020, 05:00 PM IST
ஒரு நாள் லீவு போட்ட குத்தம்! மணிமேகலை வீட்டில் வெடிச்சிடுச்சு குக்கர்! வைரலாகும் வீடியோ...

சுருக்கம்

சன் மியூசிக் தொலைக்காட்சியில், தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மணிமேகலை. தற்போது, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சியில், சீரியஸ் குக்குகளுடன் சேர்ந்து, ஜாலியாக கோமாளித்தனம் செய்து வருகிறார்.  

சன் மியூசிக் தொலைக்காட்சியில், தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மணிமேகலை. தற்போது, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சியில், சீரியஸ் குக்குகளுடன் சேர்ந்து, ஜாலியாக கோமாளித்தனம் செய்து வருகிறார்.

மேலும் 'பாரதி கண்ணம்மா' என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார். உசேன் என்பவரை பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கு சமையல் செய்ய தெரியாது என்பது... குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஊருக்கே தெரிந்து விட்டது. 

இந்நிலையில் இவருடைய வீட்டில் சமையல் வேலை செய்து வரும் பெண், ஒரு நாள் லீவு போட்ட குத்தம், மணிமேகலை குக்கரையே வெடிக்க வைத்து விட்டார்.

குக்கர் வெடித்ததில், சாதம் முழுவதும் வீட்டில் விசிறி அடித்துவிட்டது. அதனை அவர் சுத்தம் செய்வதை, மணிமேகலையின் கணவர் உசேன் தன்னுடைய செல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!