
தெலுங்கு திரையுலகின், முன்னணி இயக்குனர்களின் ஒருவர் சுகுமார். கடந்த 2004 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுனை வைத்து 'ஆர்யா' படத்தை இயக்கி, சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஜகதம், ஆர்யா 2, 100% லவ், ரங்கஸ்தலம், என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த சுகுமார், தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து 'புஷ்பா' படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, புஷ்பா தி ரைஸ் திரைப்படம் வெளியான நிலையில், இந்த ஆண்டு புஷ்பா தி ரூல் திரைப்படம் வெளியாகி உள்ளது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், திடீரென இப்படத்தின் இயக்குனர் சுகுமார் மற்றும் புஷ்பா படத்தை தயாரித்து வரும் மைத்ரேயி மூவிஸ் நிறுவனத்திற்கு, சொந்தமான இடங்களில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் இந்த சோதனைக்கான காரணம் குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, அவாலா பணத்தை பட்டுவாடா செய்ததாக வந்த தகவலின், அடிப்படையில் தான் இயக்குனர் சுகுமாரின் வீடு அவருக்கு அவரின் அலுவலகம்... மைத்ரேவி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
திரையுலகில் அதிர்ச்சி..! பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.