
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. 'கபாலி' படத்திற்கு பின்னர் மீண்டும் அதே கூட்டணியில் வெளியாகும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாளுக்குரிய டிக்கெட்டுக்கள் விற்று முடிந்துவிட்டது. அதேபோல் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் 'காலா' படத்தின் முதல் நாள் டிக்கெட்டுக்கள் விற்று முடிந்துவிட்டது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஐடி, நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் 'காலா' படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்துள்ளது. தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் ரஜினி ரசிகர்கள் என்பதால் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் விடுமுறை அளித்ததாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெளியான 'காபாலி' படத்திற்கும் இதுபோன்று சென்னையில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடம் கூடிய விடுமுறை கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.