
ரஜினிகாந்த் நடித்திருக்கும் காலா திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் நாளை ரிலீசாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது, ஆனால் ரஜினி தூத்துக்குடி விவகாரத்தில் பேசிய கருத்துக்கள், ஒட்டு மொத்த தமிழகத்தையும் அவருக்கு எதிராக இப்போது திருப்பி இருக்கிறது.
இதனால் காலா படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ரஜினி “ சமூக விரோதிகள் தான் இந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணம்” என போலீசாருக்கு ஆதரவாக பேசியது தான். மேலும் அவர் “போராட்டம் போராட்டம்னு போனா நாடே சுடுகாடாகிவிடும்” என்று கூறியது, போராளிகளையும் போராட்டங்களையும் அவமானப்படுத்தும் விதமாக இருந்தது.
இதனால் தற்போது ரஜினி குறித்து எதிர்மறையான கருத்துக்களும் மீம்ஸ்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி இருக்கும் ஒரு போஸ்டர், கொஞ்சம் அதிகப்படியாக போய் இருக்கிறது. இந்த போஸ்டரில் ரஜினி அகாலமரணம் அடைந்து விட்டதாக கூறி மரண அறிவிப்பு செய்திருக்கிறார் யாரோ ஒரு விஷமி. அதிலும் ரஜினியை குறித்து மிகவும் தரக்குறைவாகவும் விமர்சித்திருக்கிறார் அந்த போஸ்டரில். இந்த செயலுக்கு காரணம் யார்? என தெரியவில்லை. ஆனால் இது கொஞ்சம் டூ மச்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.