
கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார் எக்ஸ் வீடியோஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள நடிகை அக்ரிதி சிங்.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி, கடந்தவாரம் ரிலீசான படம் ‘எக்ஸ்- வீடியோஸ்’. சஜோ சுந்தர் என்பவர் இயக்கியுள்ள இப்படம், ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதற்கான பின்புலத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியைப் பற்றி பேசுகிறது. இப்படத்தின் நாயகி அக்ரிதி சிங், ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதல் படத்திலேயே இவ்வளவு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ரிதி,
நான் கொல்கத்தாவில் பிறந்த பெண். கடந்த நான்கு வருடங்களாக மும்பையில் செட்டிலாகி இருக்கிறேன். முதலில் மாடலிங் தான் செய்து கொண்டிருந்தேன். பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்கள் நடிக்க ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சில இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளேன். தற்போது தமிழ் படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். கண்டிப்பா தியேட்டருக்கு சென்று பாருங்கள்.
பாலிவுட்டுக்கு, தமிழ் சினிமாவுக்கு நிறையே வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கு வேலை பார்ப்பது எனக்கு பிடித்திருக்கிறது. இங்குள்ளவர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். எனக்கு மொழி பிரச்சினை இருந்தது. வசனம் பேசுவது உள்ளிட்டவைகளை சமாளிக்க எல்லோரும் எனக்கு உதவி செய்தார்கள். எனது இயக்குனர், தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர், சக நடிகர்கள் உள்பட அனைவருமே எனக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த படம் ஆபாசம் சம்பந்தப்பட்டது என்பதால், இதில் நிர்வாணக் காட்சிகளில்.. (கேள்வியை முடிக்கும் முன்பே குறிக்கிடுகிறார்) இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். இது ஆபாச படம் இல்லை. இது ஒரு சமூக பிரச்சினை சார்ந்த திரில்லர் படம். சமூகத்தில் நடக்கும் குற்றங்களை பற்றி தான் படத்தில் காட்டியுள்ளோம். இதில் ஆபாசம் இல்லை. நிச்சயமாக குடும்பத்துடன் சென்று படம் பார்கலாம்.
ஆபத்து தெரியாமல் எடுக்கப்படும் வீடியோக்கள், வெளிய கசிந்து எப்படி ஒரு குடும்பத்தை பாதிக்கிறது என்பதை இந்த படத்தில் காட்டியுள்ளோம். கட்டாயம் என்ன? நீங்கள் கேள்வியை சரியாக புரிந்துகொள்ளவில்லை.. ஆபாசத்துக்கு எதிராக எடுக்கப்படும் படத்தில் நிர்வாணக்காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஒரு நடிகையாக அந்த கதாபாத்திரத்திற்கு தேவையானதை நான் செய்ய வேண்டும். கதைக்கு வேதைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். இந்த படத்தில் நான் அப்படி நடித்ததற்கு ஒரு அழுத்தமான காரணம் இருக்கிறது. இதை நான் செய்யவில்லை என்றால், இந்த படத்தை எடுத்ததற்கே அர்த்தம் இல்லாமல் போயிருக்கும். அந்த வகையில் எனக்கு சந்தோஷம் தான்.
படத்தில் ஆபாசமாக எதுவும் காட்டவில்லை. ஆரம்பத்தில் எனக்கு தயக்கமாக தான் இருந்தது. முதலில் அப்படி நடிக்க நான் மறுத்தேன். பின்னர், தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என அனைவரும் சமாதானப்படுத்திய பிறகு தான் சம்மதித்தேன். அப்படி நடித்த கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
இந்த படம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நம்புகிறீர்களா? நிச்சயமாக… இந்த படத்தை பார்ப்பவர்கள் அவர்கள் அறியாமல் செய்ய தவறுகளை இனி செய்யாமல் இருக்க உதவும். ஏனென்றால் இங்குள்ள நிறையே பேருக்கு போர்ன் கிரைம் (ஆபாசப்படக் குற்றம்) பற்றி தெரிவதில்லை’ என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.