
இப்படை வெல்லும் படத்திற்கு பப்ளிசிட்டிக்கு செய்ததற்கு நன்றி சார் என்று அப்படத்தின் இயக்குனர் கவுரவ் ஹெச். ராஜாவிற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் ஜிஎஸ்டி வசனத்திற்கு பாஜகவினர், அதிலும் குறிப்பாக தமிழிசை, எச். ராஜா கண்டனம் தெரிவித்ததையடுத்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களை திரும்பத்திரும்ப பார்க்கச்செய்தது. பாஜகவின் தயவால் தான் படம் பலமடங்கு கலெக்ஷனை வாரிக்குவிக்கிறது என திரையுலகினர் நம்பத்தொடங்கினர்.
இந்நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 8ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படை வெல்லும் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், விஜய் நடித்த மெர்சல் படத்துக்கு முழு புரோமஷன் செய்தது பாஜக.
அது போல், இப்படை வெல்லும் திரைப்படத்துக்கும் எச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று உதயநிதி கூறியிருந்தார்.
இது தொடர்பாக ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரின் பதிவில், "ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்" என அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஹெச். ராஜாவின் ட்வீட்டை பார்த்த "இப்படை வெல்லும்" பட இயக்குனர் கவுரவ் நாராயணன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; "ராஜா சார் பப்ளிசிட்டிக்கு நன்றி சார். எங்களின் குழு உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கு. கலக்குங்க சார், கைவிட்டுடாதீங்க" என்று கலாய்த்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.