போலீஸ் பாதுகாப்போடு பீஸ்ட் படம் பார்த்த இன்பநிதி..!திரையரங்கில் குவிந்த பிரபலங்கள்...

By Ajmal KhanFirst Published Apr 13, 2022, 11:38 AM IST
Highlights

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் திரையரங்கில் படம் பார்க்க ஏராளமான ரசிகர்கள் மட்டுமிட்டலாமல் திரைத்துறையினரும் குவிந்துள்ளனர்.

திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட், நாடு முழுவதும் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் திரையரங்கில் வெளியான பீஸ்ட் படத்தை  பார்க்க அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்கை முற்றுகையிட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் விஜய் கட் அவுட்டிற்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு உள்ளே சென்றதால் திரையரங்க கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து வரிசையாக ரசிகர்களை திரையரங்கிற்குள் அனுமதித்து வருகின்றனர்.

இன்பநிதிக்கு போலீஸ் பாதுகாப்பு

இந்தநிலையில் பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க அதிகாலை முதலே திரையரங்கில் திரைபிரபரலங்கள் மற்றும் பீஸ்ட் படக்குழுவினர் குவிந்தனர். ரசிகர்களோடு ரசிகர்களாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன், நடிகர் கவின்,  பூஜா ஹெக்டே உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் படத்தை ரசித்து பார்த்தனர். இது போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனும் , சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியின் மகனுமான  இன்ப நிதியும் படம் பார்க்க அதிகாலையிலேயே திரையரங்கம் வந்திருந்தனர். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் இன்பநிதிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

click me!