இந்தியன் 2 படத்தில் நான்கு கதாநாயகிகளா?

Published : Jul 21, 2019, 04:59 PM IST
இந்தியன் 2 படத்தில் நான்கு கதாநாயகிகளா?

சுருக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக கடந்த வருடமே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை  லைக்கா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.  

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக கடந்த வருடமே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை  லைக்கா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

அதன் படி, படப்பிடிப்பு துவங்கப்பட்டு ஒரு சில நாட்கள் மட்டுமே நடந்த நிலையில், திடீர் என இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான, ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.  

இவர்களை தொடந்து தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அவர் நடிப்பாரா இல்லையா என்பது தெரியவரும்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்