இந்தியன் 2 குறித்த முக்கிய தகவல்! இந்த முறையாவது சொன்னது நடக்குமா?

By manimegalai aFirst Published Jan 2, 2019, 3:56 PM IST
Highlights

1996ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் குவித்த 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம், தற்போது படமாக்கப்பட உள்ளது. இதில்  கமலஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.
 

1996ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் குவித்த 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம், தற்போது படமாக்கப்பட உள்ளது. இதில்  கமலஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இயக்குனர் ஷங்கர், ஏற்கனவே திரைக்கதை, வசனம் எழுதி, முடித்து விட்டதாகவும் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்து வருவதாகவும் ஏற்கனவே கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  திடீர் என தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று சமூகவலைதளங்களில் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. படக்குழுவினர் இதனை மறுத்துள்ளனர்.

இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளனர்.  இதற்காக பொள்ளாச்சியில் அரங்கு அமைத்து உள்ளனர்.  கமல்ஹாசன் சில வாரங்கள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். சிம்பு கவுரவ தோற்றத்தில் வருகிறார்  மேலும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக கதையை மாற்ற வேண்டாம் என்றும் கதைக்கு என்ன தேவையோ அது இருந்தால் போதும் என்றும் பெருந்தன்மையுடன் சிம்பு சொன்னதாக பட குழுவினர் கூறுகிறார்கள்.

முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு சிபிஐ அதிகாரியாக வருகிறார். 'இந்தியன்' முதல் பாகம் கிளைமாக்சை 80 வயது முதியவராக வரும் கமலஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும் வெளிநாட்டிலிருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்திருந்தனர். அதிலிருந்து இரண்டாம் பாகம் கதை தொடங்கும் என்று தெரிகிறது இந்த படத்திலும் கமலஹாசன் வயதானவராக இளைஞராகவும் இரண்டு வேடங்களில் அடிக்கிறார்.  எனினும் இடைத்தேர்தல் வர இருப்பதால் கமலஹாசன் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்கிற குழப்பமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த முறையாவது சொன்னது போல் படப்பிடிப்பு நடக்குமா என பல கேள்விகள் எழுந்துள்ளது. 

click me!