இதற்கு காரணம் சிறு வயது முதல் தன் உடம்பில் வர்ணங்களை பூசிக்கொண்டு பல மணி நேரம்..
ஊர் திருவிழா மற்றும் கோவில் திருவிழாக்களின் போது அப்பகுதியில் பல்வேறு மேடை நாடகங்கள் நடத்தும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. இவ்வகை நாடகங்களை பார்க்கும் பலருக்கும் பரிச்சயமான ஒன்றுதான், மேடையில் தன் உடல் முழுக்க வர்ணத்தை பூசிக்கொண்டு ரோபோவை போல நடிக்கும் கலைஞர்களின் வாழ்கை.
அதுபோல சிறுவயது முதலிலேயே பல ஆண்டுகள் தன் உடல் முழுவதும் வர்ணங்களை பூசிக்கொண்டு, அச்ச அசலாக ரோபோவை போல நடித்து, அதன் பிறகு சின்ன திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வெற்றி பெற்று. இன்று ஒரு சிறந்த குணசித்திர நடிகராக விளங்கி வருபவர் தான் ரோபோ சங்கர்.
இதையும் படியுங்கள் : திருவண்ணாமலைக்கு திடீர் விசிட் அடித்த ரஜினி... ரவுண்ட் கட்டிய ரசிகர்கள்
கடந்த சில மாதங்களாகவே பல கிலோ எடையை இழந்து, தற்பொழுது மெலிந்த தேகத்தோடு வலம்வருகின்றார். இதற்கு காரணம் சிறு வயது முதல் தன் உடம்பில் வர்ணங்களை பூசிக்கொண்டு பல மணி நேரம் இருந்ததாலும், கலை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அந்த வர்ணத்தை நீக்க மானென்னை உள்ளிட்ட பொருட்களை தன் உடலில் பயன்படுத்தியதாலும் தனக்கு மஞ்சள் காமாலை நோய் முன்பில் இருந்தே இருந்தது என்று அவர் கூறியிருந்தார்.
தற்பொழுது தனது உடல் எடை குறைய முக்கிய காரணமும் மஞ்சள் காமாலை நோய் தான் என்றும், சாவின் விளிம்பிற்கே தான் சென்று திரும்பியதாகவும் பல பேட்டிகளில் தொடர்ச்சியாக அவர் கூறி வருகிறார். இந்நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, கடந்த சில மாதங்களாக என் தந்தைக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்தது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
ஆனால் தற்பொழுது அவர் அதிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு குடியை மறந்து புத்துயிர் பெற்று வாழ்ந்து வருகிறார். ஆகவே மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று கூறி அந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். 21 வயது நிரம்பியுள்ள இந்திரஜாவிற்கு விரைவில் திருமணம் ஆக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : ஸ்லிம் லுக்கிற்கு மாறிய அஜித்தின் - மாஸ் காட்டும் தல!