Income Tax Raid : விடுதலை பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் போலியான ரசீதுகள் உருவாக்கி பொய் கணக்கு காண்பித்து வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
விடுதலை பட தயாரிப்பாளர்
சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, ஜீவா நடித்த கோ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்தவர் எல்ரெட் குமார். இவர் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் என்கிற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்துள்ள இவர், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை தயாரித்து வருகிறார்.
25 இடங்களில் ஐடி ரெய்டு
தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ஏராளமான ஆவணங்களும் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
சிக்கியது என்னென்ன?
இந்நிலையில், அவை என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு தொடர்புடைய வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3.82 கோடி ரொக்க பணமும், 8.4 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாம்.
ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு
இதுதவிர போலியான ரசீதுகள் உருவாக்கி பொய் கணக்கு காண்பித்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்து அதனை அவர் பலவற்றில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... yashika:உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார்? நெட்டிசனின் ஏடாகூடமான கேள்விக்கு கூலாக பதிலளித்த யாஷிகா